மட்டக்களப்பு மேய்ச்சல்தரை பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் பண்ணையாளர்களுக்கு ஆதரவாக இன்று யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் நடந்தது.
மட்டக்களப்பு பண்ணையாளர்களுக்கு நீதி கோரி இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று பிற்பகல் நல்லூர் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்திற்கு முன்பாக தமிழர் ஒருங்கிணைந்த கட்டமைப்பின் ஏற்பாட்டில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களான த.சித்தார்த்தன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள் பா.கஜதீபன், க.சர்வேஸ்வரன், சைவ மகா சபையினர், மத தலைவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்களால் இன்றையதின் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாபொரும் கவயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Leave Comments